மங்கிஹில்- தாக்குர்வாடி இடையே திடீர் நிலச்சரிவு - பெரும் விபத்து தவிர்ப்பு


மங்கிஹில்- தாக்குர்வாடி இடையே திடீர் நிலச்சரிவு - பெரும் விபத்து தவிர்ப்பு
x
தினத்தந்தி 2 July 2023 8:00 PM GMT (Updated: 2 July 2023 8:01 PM GMT)

மங்கிஹில்-தாக்குர்வாடி இடையே திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இருப்பினும் அங்கிருந்த தடுப்பு சுவர்கள் காரணமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

மும்பை,

மங்கிஹில்-தாக்குர்வாடி இடையே திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இருப்பினும் அங்கிருந்த தடுப்பு சுவர்கள் காரணமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

நிலச்சரிவு

மும்பை மத்திய ரெயில்வே வழித்தடத்தில் மங்கிஹில்-தாக்குர்வாடி இடையே நேற்று முன்தினம் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவு காரணமாக மலையில் இருந்த பாறைகள் தண்டவாளத்தை நோக்கி விழுந்தது. இருப்பினும் அதிர்ஷ்டவசமாக அங்கு 60 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டு இருந்த தடுப்பு சுவர் பாறாங்கற்கள் தண்டவாளத்தில் விழாமல் தடுத்து நிறுத்தியது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தகவல் அறிந்த ரெயில்வே அதிகாரிகள் 50 தொழிலாளிகளுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு சிதறி கிடந்த பாறாங்கற்களை எந்திரங்கள் மூலம் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

பாதுகாப்பு வலைகள்

இது பற்றி தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி சிவராஜ் மனஸ்புரே கூறியதாவது:-

தடுப்பு சுவர்கள் இல்லாவிட்டால் நிலச்சரிவு காரணமாக ரெயில்வே தண்டவாளத்திற்கு சேதம் ஏற்பட்ட வாய்ப்பு இருந்தது. இது அந்த வழியாக செல்லும் ரெயில்களுக்கு விபத்தையும், உயிரிழப்பையும் ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. ஆனால் முன் எச்சரிக்கையுடன் அமைக்கப்பட்ட தடுப்புச்சுவர் சரியான நேரத்தில் உதவியுள்ளது. இதேபோல கர்ஜத் மற்றும் கசாரா பகுதிகளில் பாறைகள் விழும் பகுதிகள் கண்டறியப்பட்டு, ஏற்கனவே 550 சதுர மீட்டர் பரப்பளவில் பாதுகாப்பு வலைகள் அமைக்கப்பட்டு உள்ளது. மத்திய ரெயில்வே மழைக்காலத்தில் பயணிகளின் உயிரை பாதுகாக்கவும், தண்டவாளத்தில் சேதம் ஏற்படாமல் தடுக்கவும் திறம்பட செயலாற்றி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.



Next Story