பைகுல்லா அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ


பைகுல்லா அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ
x

மும்பை பைகுல்லாவில் பாயா விக்டோரியா என்ற அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ

மும்பை,

மும்பை பைகுல்லாவில் பாயா விக்டோரியா என்ற 22 மாடி கொண்ட அடுக்குமாடி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தின் 8-வது மாடியில் நேற்று மாலை 5.18 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கரும்புகையுடன் வெளிவந்ததை அப்பகுதி மக்கள் கண்டனர். தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் கட்டிடத்தின் 8-வது மாடிக்கு சென்றனர். அங்கு கரும்புகையில் சிக்கி இருந்தவர்களை மீட்டு கீழ் தளத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர் மாடி வீட்டில் பற்றிய தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 40 நிமிட இடைவெளியில் அங்கு பற்றிய தீயை முற்றிலும் அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் யாரும் காயமடையவில்லை என தீயணைப்பு படையினர் தெரிவித்தனர்.


Next Story