குறைந்த தூர சவாரிக்கு செல்ல மறுக்கும் ஆட்டோ, டாக்சி டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை- போலீஸ் எச்சரிக்கை


குறைந்த தூர சவாரிக்கு செல்ல மறுக்கும் ஆட்டோ, டாக்சி டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை- போலீஸ் எச்சரிக்கை
x
தினத்தந்தி 18 Oct 2022 12:15 AM IST (Updated: 18 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

குறைந்த தூர சவாரிக்கு செல்ல மறுக்கும் ஆட்டோ, டாக்சி டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மும்பை போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மும்பை,

மும்பையில் ஆட்டோ, டாக்சி டிரைவர்கள் குறைந்த தூர பயணம் செல்லும் பயணிகளை ஏற்றி செல்வதில் தயக்கம் காட்டுவதை பார்க்க முடியும். குறைந்த தூர பயணத்தை ஏற்றுகொள்வதால் குறைந்த வருமானமே கிடைக்கும் என்பதே இதற்கு முக்கிய காரணம்.

சிலர் அத்தகைய பயணிகளை உதாசினப்படுத்திவிட்டு அதிக வருமானத்திற்காக நீண்ட தூர பயணிகளையே நாடி செல்கின்றனர்.

இந்த நிலையில் போக்குவரத்து போலீஸ் துறை நேற்று உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. இதில் போக்குவரத்து ஊழியர்கள் குறுகிய தூர சவாரிகளை மறுத்து நீண்ட தூர பயணங்களை தேடும் ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுனர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது தவிர குடிமக்களிடம் நன்றாக நடத்து கொள்ள ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.


Next Story