'தெரு நாய் தத்தெடுக்கும்' திட்டத்தை தொடங்க வேண்டும்- முதல்-மந்திரிக்கு எம்.எல்.ஏ. கடிதம்


தெரு நாய் தத்தெடுக்கும் திட்டத்தை தொடங்க வேண்டும்- முதல்-மந்திரிக்கு எம்.எல்.ஏ. கடிதம்
x
தினத்தந்தி 20 Sep 2022 7:30 PM GMT (Updated: 20 Sep 2022 7:30 PM GMT)

தானே உள்ளிட்ட சில பகுதிகளில் ‘தெரு நாய் தத்தெடுக்கும்' திட்டத்தை தொடங்க வேண்டும் என முதல்-மந்திரிக்கு எம்.எல்.ஏ. கடிதம்

மும்பை,

தானே உள்ளிட்ட சில பகுதிகளில் தெருநாய் பிரச்சினை அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் பிரதாப் சர்நாயக் எம்.எல்.ஏ. மராட்டியத்தில் தெருநாய் பிரச்சினையை தீா்க்க நடவடிக்கை எடுக்குமாறு முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

அவர் எழுதி உள்ள கடிதத்தில், மாநிலத்தில் தெரு நாய் பிரச்சினையை தீர்க்க 'தெரு நாய் தத்தெடுக்கும்' திட்டத்தை தொடங்க வேண்டும் என பரிந்துரை செய்து உள்ளார். மேலும் அவா் தெருநாய் பிரச்சினையை தீர்க்க மாநில அரசு ஆஸ்பத்திரிகள், நாய் வளர்ப்பு இடங்களுடன் கூடிய விலங்குகள் நல மையங்களை அமைக்க வேண்டும் என தெரிவித்து உள்ளார். தானேயை சேர்ந்த சிவசேனாவின் பிரதாப் சர்நாயக் எம்.எல்.ஏ. ஷிண்டே அணியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story