இஸ்ரேலுடனான வர்த்தகத்தை நிறுத்த வேண்டும்; பிரதமருக்கு, நசீம் கான் கடிதம்
இஸ்ரேலுடனான வர்த்தகத்தை நிறுத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு மூத்த காங்கிரஸ் தலைவர் நசீம் கான் கடிதம் எழுதி உள்ளார்.
மும்பை,
இஸ்ரேலுடனான வர்த்தகத்தை நிறுத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு மூத்த காங்கிரஸ் தலைவர் நசீம் கான் கடிதம் எழுதி உள்ளார்.
கடிதம்
பாலஸ்தீனத்திற்கும், இஸ்ரேலுக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் இஸ்ரேலுடனான இருதரப்பு வர்த்தகத்தை நிறுத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மந்திரியுமான நசீம் கான் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். அவர் தனது கடிதத்தில் கூறியதாவது:- இஸ்ரேலுடனான அனைத்து இருதரப்பு வர்த்தகத்தையும், இந்தியா உடனடியாக நிறுத்த வேண்டும். இது இந்தியாவின் அமைதியை விரும்பும் கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதாக இருக்கும்.
நல்ல உறவு
ஜவகர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, அடல் பிகாரி வாஜ்பாய் முதல் மன்மோகன் சிங் வரை இந்திய அரசு பாலஸ்தீனத்தின் தலைமை மற்றும் மக்களுடன் நல்ல உறவை கொண்டுள்ளது. மனிதாபிமான அடிப்படையில் தேவைப்படும் நேரத்தில் அவர்களுடன் நாம் எப்போதும் துணை நின்றுள்ளோம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.