விநாயகர் சதுர்த்தி கொண்டாட செல்லும் வாகனங்களுக்கு சுங்கச்சாவடியில் சிறப்பு பாதை- அதிகாரிகளுக்கு, ஏக்நாத் ஷிண்டே உத்தரவு

விநாயகர் சதுர்த்தி கொண்டாட செல்லும் வாகனங்களுக்கு சுங்கச்சாவடியில் சிறப்பு பாதை- அதிகாரிகளுக்கு, ஏக்நாத் ஷிண்டே உத்தரவு
x

விநாயகர் சதுர்த்தி கொண்டாட செல்லும் வாகனங்களுக்கு சுங்கச்சாவடியில் சிறப்பு பாதை அமைக்குமாறு அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே உத்தரவிட்டு உள்ளார்.

மும்பை,

விநாயகர் சதுர்த்தி கொண்டாட செல்லும் வாகனங்களுக்கு சுங்கச்சாவடியில் சிறப்பு பாதை அமைக்குமாறு அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே உத்தரவிட்டு உள்ளார்.

சுங்க கட்டணம் விலக்கு

மராட்டியம் முழுவதும் வருகிற 31-ந் தேதி முதல் செப்டம்பர் 9-ந் தேதி வரை விநாயகர் சதுர்த்தி 10 நாள் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. விநாயகர் சதுா்த்தி கொண்டாட்டத்துக்காக நகா்புறங்களில் வசிக்கும் மக்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். குறிப்பாக கொங்கன் பகுதிக்கு அதிகளவில் பொது மக்கள் செல்வார்கள். எனவே மாநில அரசு கடந்த 27-ந் தேதி முதல் அடுத்த மாதம் 11-ந் தேதி வரை மும்பை - பெங்களூரு, மும்பை - கோவா நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளில், சுங்க கட்டணத்தில் இருந்து விலக்கு அளித்து உள்ளது.

வாகனங்களுக்கு சிறப்பு பாதை

இந்தநிலையில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே நேற்று முன்தினம் காலாப்பூர் சுங்கச்சாவடியை பார்வையிட்டார். பின்னர் அவர் அதிகாரிகளை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பின்னர் விநாயகர் சதுர்த்திக்காக சொந்த ஊர் செல்லும் வாகனங்களின் வசதிக்காக சுங்கச்சாவடிகளில் சிறப்பு பாதை அமைக்கும்படி அதிகாரிகளுக்கு ஏக்நாத் ஷிண்டே உத்தரவிட்டு உள்ளார்.

நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதல்-மந்திரி அலுவலகம் தெரிவித்து உள்ளது.

இதேபோல ஏக்நாத் ஷிண்டே விபத்துகளை தவிர்க்க நெஞ்சாலையில் அதிகளவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும், விரைவு சாலைகளில் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Next Story