இரும்பு கம்பியால் தாக்கி தந்தையை கொலை செய்த மகன் கைது


இரும்பு கம்பியால் தாக்கி தந்தையை கொலை செய்த மகன் கைது
x
தினத்தந்தி 2 July 2023 1:30 AM IST (Updated: 2 July 2023 1:30 AM IST)
t-max-icont-min-icon

மும்பை அந்தேரி பகுதியில் தந்தையை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

மும்பை அந்தேரியை சேர்ந்த 53 வயதுடைய நபர் இந்தி நடிகரிடம் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவரது (24) வயது மகன் வேலை இல்லாமல் ஊர் சுற்றி வந்ததாக தெரிகிறது. இதனால் வேதனை அடைந்த தந்தை மகனை கண்டித்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டிற்கு வந்த மகனை திட்டி உள்ளார். ஆத்திரமடைந்த மகன் அங்கு கிடந்த இரும்பு கம்பியால் தந்தையை தாக்கி விட்டு தப்பி சென்றார். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த தந்தையை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு 3 நாட்கள் சிகிச்சை பெற்ற நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தந்தையை கொலை செய்த மகனை கைது செய்தனர். இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story