பா.ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேறி நிதிஷ்குமார் புயலை உருவாக்கி உள்ளார்-சிவசேனா கருத்து


பா.ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேறி நிதிஷ்குமார் புயலை உருவாக்கி உள்ளார்-சிவசேனா கருத்து
x

பா.ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேறி நிதிஷ்குமார் புயலை உருவாக்கி உள்ளதாக சிவசேனா கூறியுள்ளது.

மும்பை,

பா.ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேறி நிதிஷ்குமார் புயலை உருவாக்கி உள்ளதாக சிவசேனா கூறியுள்ளது.

பீகாரில் புதிய கூட்டணி

பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம்- பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. எனினும் நிதிஷ்குமாருக்கும், பா.ஜனதாவுக்கும் இடையே பனிப்போர் நிலவி வந்தது. இந்தநிலையில் அவர் பா.ஜனதாவுடனான கூட்டணியை முறித்து ராஷ்டிரீய ஜனதா தளத்துடன் இணைந்து ஆட்சி அமைத்து உள்ளார்.

இதுகுறித்து சிவசேனா சாம்னாவில் கூறியிருப்பதாவது:-

முன்னாள் மத்திய மந்திரி ஆர்.சி.பி. சிங்கிற்கு பின்னால் இருந்து ஜனதா தளம் கட்சியை உடைக்க பா.ஜனதா முயற்சி செய்தது. இதை உணர்ந்து கொண்ட நிதிஷ்குமார் பா.ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேறி உள்ளார்.

சூறாவளி

நிதிஷ்குமார் பா.ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேறி புயலை உருவாக்கி உள்ளார். இது சூறாவளியாக மாறினால், வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் அது பா.ஜனதாவுக்கு மிகப்பெரிய சவலாக அமையும். மேலும் இந்த புதிய கூட்டணியில் நிதிஷ்குமார், லாலுபிரசாத் இடையேயான பகை முடிவுக்கு வரும். சிவசேனாவுக்கு எதிராக கலகம் செய்த ஏக்நாத் ஷிண்டே டெல்லிக்கு முன்னால் மண்டியிட்டார். ஆனால் பா.ஜனதா இல்லாமல் வாழ முடியும் என நிதிஷ்குமார் அவருக்கு காட்டி உள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story