காஷிமிராவில் 3 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு - 3 பேர் கைது
தானே மாவட்டம் காஷிமிராவில் 3 குழந்தை தொழிலாளர்கள் மீட்க்கப்பட்டு 3 பேர் கைது செய்யபட்டனர்.
தானே,
தானே மாவட்டம் காஷிமிராவில் உள்ள தொழிற்சாலையில் குழந்தை தொழிலாளிகள் பணியில் ஈடுபடுத்தி வருவதாக மிராபயந்தர்-வசாய்விரார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அங்கு அபாயகரமான வேலைகளில் 14 வயது முதல் 18 வயதுடைய 3 சிறுவர்களை ஈடுபடுத்தியதை கண்டனர். அவர்களை போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும் அவர்களை வேலைக்கு நியமித்த தொழிற்சாலையின் மேற்பார்வையாளர்கள் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
Related Tags :
Next Story