ஆரேகாலனியில் மெட்ரோ பணிமனைக்கு எதிர்ப்பு- ஏக்நாத் ஷிண்டே வீட்டின் அருகே காங்கிரசார் போராட்டம்


ஆரேகாலனியில் மெட்ரோ பணிமனைக்கு எதிர்ப்பு- ஏக்நாத் ஷிண்டே வீட்டின் அருகே   காங்கிரசார் போராட்டம்
x

ஆரேகாலனியில் மெட்ரோ பணிமனை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தானேயில் உள்ள ஏக்நாத் ஷிண்டே வீட்டின் அருகே காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

மும்பை,

ஆரேகாலனியில் மெட்ரோ பணிமனை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தானேயில் உள்ள ஏக்நாத் ஷிண்டே வீட்டின் அருகே காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

ஆரேகாலனி மெட்ரோ பணிமனை

மும்பையில் மெட்ரோ-3 திட்டப்பணிக்காக ஆரேகாலனியில் பணிமனை கட்ட திட்டமிடப்பட்டு இருந்தது. மெட்ரோ திட்டத்தால் ஆரே காலனி வனப்பகுதி பாதிக்கப்படும் என முந்தைய உத்தவ் தாக்கரே அரசு பணிமனையை காஞ்சூர்மார்க்கிற்கு மாற்றியது. இந்தநிலையில் மாநிலத்தில் புதிதாக அமைந்து உள்ள ஏக்நாத் ஷிண்டே அரசு மீண்டும் ஆரேகாலனியில் மெட்ரோ பணியை அமைக்க உள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை ஆரேகாலனியில் சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

காங்கிரஸ் போராட்டம்

இந்தநிலையில் காங்கிரஸ் கட்சியின் சுற்றுச்சூழல் பிரிவினர் இன்று ஆரே காலனியில் மெட்ரோ பணிமனை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தானேயில் உள்ள முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே வீட்டின் அருகில் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் பெண்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். அவர்கள் ஏக்நாத் ஷிண்டே வீட்டின் அருகே உள்ள கேட்பரி ஜங்ஷன் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். கையில் 'சேவ் ஆரேகாலனி' என்ற பதாகையுடன் அவர்கள் ஆரேகாலனியில் மெட்ரோ பணிமனை கட்ட எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர்.

இதையடுத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து வாக்ளே எஸ்டேட் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். சிறிது நேரத்தில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். போராட்டம் காரணமாக நேற்று ஏக்நாத் ஷிண்டே வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.


Next Story