பிரதமர் மோடி மும்பை வருகை
பிரதமர் மோடி நாளை மறுநாள் மும்பை வருகிறார்
மாவட்ட செய்திகள்
மும்பை,
பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) மும்பை வருகிறார். பின்னர் புனே செல்லும் அவர் அங்கு தெகு பகுதியில் ஜகத்குரு சந்த் துக்காரம் கோவிலை திறந்து வைக்கிறார். இதையடுத்து மும்பை வரும் அவர், ராஜ்பவனில் புதிய கட்டிடம், சுரங்கப்பாதை அருங்காட்சியகத்தையும் திறந்து வைக்கிறார்.
பின்னர் மும்பை பி.கே.சி.யில் நடைபெறும் குஜராத்தி பத்திரிகையான 'மும்பை சமாச்சரின்' 200-வது ஆண்டு விழாவில் கலந்து கொள்கிறார். மேலும் அவர் அந்த பத்திரிகை ஊழியர்கள் மற்றும் வாசகர்களுடன் உரையாடுகிறார்.
இந்த நிகழ்ச்சியில் குஜராத் முதல்-மந்திரி புபேந்திர பாட்டீல் கலந்து கொள்கிறார். மேலும் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி வருகையையொட்டி புனே, மும்பையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story