புத்தாண்டு தினத்தில் ராணி பூங்காவுக்கு படையெடுத்த மக்கள்
புத்தாண்டு தினமான நேற்று ஒரே நாளில் ராணி பூங்காவில் 32 ஆயிரத்து 820 பயணிகள் குவிந்தனர்.
மும்பை,
புத்தாண்டு தினமான நேற்று ஒரே நாளில் ராணி பூங்காவில் 32 ஆயிரத்து 820 பயணிகள் குவிந்தனர்.
குவிந்த கூட்டம்
மும்பையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று புத்தாண்டு விமரிசையாக கொண்டாடப்பட்டது. புத்தாண்டை கொண்டாட பைகுல்லாவில் உள்ள ராணி உயிரியல் பூங்காவுக்கு நேற்று மக்கள் அதிகளவில் படையெடுத்தனர்.
நேற்று ஒரே நாளில் மட்டும் பூங்காவுக்கு 32 ஆயிரத்து 820 பேர் வருகை தந்தனர். டிக்கெட் விற்பனை மூலம் ரூ.13.78 லட்சம் வருவாய் கிடைத்தது.
டிக்கெட் கவுன்ட்டர் திடீர் மூடல்
இந்தநிலையில் கூட்டம் கட்டுக்கடங்காமல் சென்றதால் மாலை 4.45 மணியளவில் பூங்காவின் டிக்கெட் கவுண்ட்டர் மூடப்பட்டது. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் டிக்கெட் வாங்கி உள்ளே செல்ல முடியாமல் வாசல் பகுதியில் தவித்தனர். இந்த சம்பவத்தால் பூங்காவின் வாசல் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பைகுல்லா ராணி பூங்காவில் வங்காள புலிகள், முதலை, யானை, புள்ளி மான் உள்ளிட்ட பல விலங்குகள் உள்ளன. இந்தியாவிலேய ராணி பூங்காவில் மட்டுமே பென்குயின்கள் உள்ளன.