நிதின் கட்காரியின் வாழ்க்கை படம் இளைய தலைமுறைக்கு உத்வேகம் அளிக்கும்; டிரைலர் வெளியீட்டு விழாவில் பட்னாவிஸ் பேச்சு


நிதின் கட்காரியின் வாழ்க்கை படம் இளைய தலைமுறைக்கு உத்வேகம் அளிக்கும்; டிரைலர் வெளியீட்டு விழாவில் பட்னாவிஸ் பேச்சு
x
தினத்தந்தி 17 Oct 2023 1:00 AM IST (Updated: 17 Oct 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

நிதின் கட்காரியின் வாழ்க்கை படம் இளைய தலைமுறைக்கு உத்வேகம் அளிக்கும் என டிரைலர் வெளியீட்டு விழாவில் துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.

நாக்பூர்,

நிதின் கட்காரியின் வாழ்க்கை படம் இளைய தலைமுறைக்கு உத்வேகம் அளிக்கும் என டிரைலர் வெளியீட்டு விழாவில் துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.

நிதின் கட்காரி படம்

மத்திய மந்திரி நிதின் கட்காரியின் வாழ்க்கையை மையமாக கொண்டு "கட்காரி" என்ற படம் உருவாகி உள்ளது. இந்த படத்தை அனுராக் பூசாரி இயக்கியுள்ளார். ஏ.எம். சினிமா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நாக்பூரில் நடைபெற்றது. இதில் துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:- மத்திய மந்திரி நிதின் கட்காரி வாழ்க்கையில் எவ்வளவு பெரிய போராட்டம் இருந்தாலும் துவண்டுவிடாமல் விடாப்பிடியாக போராடும் குணம் கொண்டவர். இதுவே எங்களை போன்ற தொண்டர்களுக்கு உத்வேகம் அளிக்கிறது. அவர் ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர், அவர் மந்திரி மட்டும் இல்லை, ஒரு கண்டுபிடிப்பாளர்.

இளைஞர்களுக்கு உத்வேகம்

மும்பை-புனே விரைவு சாலை திட்டத்தை அவர் சிறப்பாக செய்து முடித்தார். ரூ.3 ஆயிரத்து 600 கோடி ஆகும் என கூறப்பட்ட இந்த விரைவு சாலையை ரூ.1,600 கோடியில் போட்டவர். இந்த பாதை தரமான சாலைகளை வழங்கியுள்ளதுடன், போக்குவரத்து நேரத்தையும் குறைத்துள்ளது. மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை மந்திரியான அவர், அடல் சுரங்கப்பாதை மற்றும் பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளை நாடு முழுவதும் கொண்டுவந்துள்ளார். நிதின் கட்காரியின் வாழ்க்கை வரலாற்றை கூறும் இந்த படம் ஒரு தலைவர் எப்படி உருவாகிறார். அவர் சாதாரண தொண்டனாக எப்படி செயல்படுகிறார் என்பதை எடுத்துக் காட்டும். இது இளைஞர்களுக்கு உத்வேகம் வழங்கும். சிறு வயதில் இருந்தே நிதின் கட்காரியுடன் பணிபுரியும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இந்தியா முழுவதும் உள்ள மக்களால் நேசிக்கப்படும் உண்மையான நாக்பூரின் மத்திய மந்திரி நிதின் கட்காரி ஆவார். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story