நவாப் மாலிக் அப்பாவி கிடையாது- கோர்ட்டில் அமலாக்கத்துறை வாதம்


நவாப் மாலிக் அப்பாவி கிடையாது- கோர்ட்டில் அமலாக்கத்துறை வாதம்
x

நவாப் மாலிக் அப்பாவி கிடையாது என சிறப்பு கோர்ட்டில் அமலாக்கத்துறை கூறியுள்ளது.

மும்பை,

நவாப் மாலிக் அப்பாவி கிடையாது என சிறப்பு கோர்ட்டில் அமலாக்கத்துறை கூறியுள்ளது.

நவாப் மாலிக் கைது

மும்பை குர்லா கோவாவாலா காம்பவுன்டில் முன்னாள் மந்திரி நவாப் மாலிக்கிற்கு சொந்தமாக சொத்துக்கள் உள்ளது. அவர் அந்த சொத்தை நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமுடன் தொடர்புடையவர்களிடம் இருந்து வாங்கியதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் இந்த விவகாரத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் நவாப்மாலிக் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

தற்போது நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்தநிலையில் அவர் ஜாமீன் கேட்டு மும்பை சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளார்.

அப்பாவி இல்லை

இந்த மனு மீதான விசாரணை நேற்று முன்தினம் நடந்தது. அப்போது அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சோலிசிஸ்டர் ஜெனரல் அனில் சிங் நவாப் மாலிக்கிற்கு ஜாமீன் கொடுக்க எதிர்ப்பு தெரிவித்தார். அவர், "நவாப் மாலிக் நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் சகோதரி ஹசினா பாரிக்கருடன் தொடர்புடைய சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அப்பாவி என்ற கேள்விக்கே இடமில்லை. இந்த வழக்கில் நவாப் மாலிக்கிற்கும், ஹசினா பாரிக்கருக்கும் தொடர்பு உள்ளது.

சொத்து தகராறில் தலையிட்டு தீர்த்து வைத்து பணம் சம்பாதிப்பது தான் ஹசினா பார்க்கரின் வேலை. அவர் கோவாவாலா காம்பவுன்ட் சொத்து விவகாரத்திலும் தலையிட்டு உள்ளார். அவரது மகன் இது குறித்து வாக்குமூலம் அளித்து இருக்கிறார். குறிப்பிட்ட சொத்து தவறானது என நவாப் மாலிக்கிற்கு தெரியும். எனவே அவர் ஆவணங்களை தயார் செய்து பல கோடி மதிப்பிலான சொத்தை சில லட்சங்களுக்கு வாங்கி உள்ளார். எனவே நவாப் மாலிக்கின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்" என கூறினார்.


Next Story