வந்தே பாரத் ரெயிலில் பயணிக்கு வழங்கப்பட்ட உணவில் நகம் - ஒப்பந்ததாரருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்


வந்தே பாரத் ரெயிலில் பயணிக்கு வழங்கப்பட்ட உணவில் நகம் - ஒப்பந்ததாரருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்
x
தினத்தந்தி 14 July 2023 12:30 AM IST (Updated: 14 July 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

மும்பை- கோவா வந்தே பாரத் ரெயிலில் பயணிக்கு வழங்கப்பட்ட உணவில் நகம் கிடந்த சம்பவத்தை அடுத்து ஒப்பந்ததாரருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மும்பை,

மும்பை- கோவா வந்தே பாரத் ரெயிலில் பயணிக்கு வழங்கப்பட்ட உணவில் நகம் கிடந்த சம்பவத்தை அடுத்து ஒப்பந்ததாரருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

உணவில் மனித நகம்

அதிவேகமாக பயணிகளை கொண்டு சேர்க்கும் வந்தே பாரத் ரெயில் 2019-ல் அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை நாட்டில் பல்வேறு வழித்தடங்களில் 23 வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் பயணிகள் இடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இதில் மும்பை- கோவா ரெயிலில் உணவின் தரம் மோசமாக இருப்பதாக பயணிகள் சமூகவலைதளத்தில் புகார் அளித்து வருகின்றனர். கடந்த மாதம் 27-ந்தேதி ஹிமான்சு முகர்ஜி என்ற பயணி மும்பை சி.எஸ்.எம்.டி.யில் இருந்து கோவாவில் உள்ள மட்காவுக்கு வந்தே பாரத் ரெயிலில் சென்றார். அப்போது அவருக்கு வழங்கப்பட்ட பருப்பு குழம்பு, பன்னீர் கிரேவி சாப்பிட முடியாத அளவுக்கு இருந்து உள்ளது. இதேபோல அவருடன் வந்த மச்சிந்திரா பவாருக்கு வழங்கப்பட்ட உணவில் மனித நகம் கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், இதுதொடர்பாக வீடியோ ஆதாரத்துடன் டுவிட்டரில் பதிவிட்டு இருந்தார்.

ரூ.25 ஆயிரம் அபராதம்

இந்தநிலையில் ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனம் மும்பை - கோவா வந்தே பாரத் ரெயில் கேட்டரிங் ஒப்பந்ததாரருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து உள்ளது. மேலும் பயணிகள் புகாரை அடுத்து இதுபோன்ற சம்பவங்களை தடுக்க சில கடுமையான நடைமுறைகளை ஐ.ஆர்.சி.டி.சி. பின்பற்ற உள்ளதாகவும், உயர் அதிகாரிகள் ரெயிலில் பயணம் செய்து பயணிகளுக்கு வழங்கும் உணவை கண்காணிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.


Next Story