கரைப்பு நிகழ்ச்சிகளில் தேவி சிலைகளை புகைப்படம் எடுக்க தடை- மும்பை போலீசார் உத்தரவு


கரைப்பு நிகழ்ச்சிகளில் தேவி சிலைகளை புகைப்படம் எடுக்க தடை- மும்பை போலீசார் உத்தரவு
x
தினத்தந்தி 28 Sept 2022 10:15 AM IST (Updated: 28 Sept 2022 10:16 AM IST)
t-max-icont-min-icon

கரைப்பு நிகழ்ச்சிகளில் தேவி சிலைகளை புகைப்படம் எடுக்க தடை விதித்து மும்பை போலீசார் உத்தரவிட்டு உள்ளனர்.

மும்பை,

கரைப்பு நிகழ்ச்சிகளில் தேவி சிலைகளை புகைப்படம் எடுக்க தடை விதித்து மும்பை போலீசார் உத்தரவிட்டு உள்ளனர்.

போலீசார் உத்தரவு

மும்பையில் நவராத்திரி விழா பண்டிகையின் போது இறுதி நாட்களில் தேவி சிலைகளை கடற்கரையில் கரைப்பது வழக்கம். அப்போது சிலைகளை சிலர் மிதக்கும் நிலையிலும், பாதி நீரில் மூழ்கிய நிலையிலும் புகைப்படங்களை எடுத்து அதனை சில விஷமிகள் சமூகவலைத்தளத்தில் அவதூறாக பரப்பி விடுகின்றனர்.

இதனால் சம்பந்தப்பட்ட மக்கள் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். இதனை தடுக்கும் நோக்கத்தில் மும்பை போலீசார் இந்த உத்தரவை பிறப்பித்து உள்ளனர்.

கடும் நடவடிக்கை

இந்த உத்தரவின் படி நவராத்திரி பண்டிகையின் தசரா தினமான அக்டோபர் 5-ந் தேதி முதல் 7-ந் தேதி வரையில் மத உணர்வுகளை புண்படுத்துதல் மற்றும் பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் சிலை கரைப்பின் போது தேவி சிலைகளை வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுக்க கூடாது.

இதனை சமூகவலைத்தளத்தில் பரப்பவும் தடை விதிக்கப்படுகிறது. இந்த செயலை மீறும் நபர்கள் மீது சட்டம் 144-ம் பிரிவின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story