மாந்திரீக பூஜைக்காக மருமகளின் மாதவிடாய் ரத்தத்தை ரூ.50 ஆயிரத்துக்கு விற்று வந்த மாமியார்- போலீசார் வழக்குப்பதிவு
மாந்திரீக பூஜைக்காக மருமகளின் மாதவிடாய் ரத்தத்தை ரூ.50 ஆயிரத்துக்கு விற்று வந்த மாமியார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
புனே,
மாந்திரீக பூஜைக்காக மருமகளின் மாதவிடாய் ரத்தத்தை ரூ.50 ஆயிரத்துக்கு விற்று வந்த மாமியார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புனே, மார்ச்.11-
மாந்திரீக பூஜைக்காக மருமகளின் மாதவிடாய் ரத்தத்தை ரூ.50 ஆயிரத்துக்கு விற்று வந்த மாமியார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
போலீசில் புகார்
பீட் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நடந்தது. கணவர் வீட்டில் தன்னை மாமியார் சித்ரவதை செய்து வருவதாக அப்பெண் பெற்றோரிடம் தெரிவித்தார்.
இதன்பேரில் பெற்றோர் போலீசில் மாமியாருக்கு எதிராக அங்குள்ள போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாாரின் படி போலீசார் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரித்தனர்.
ரூ.50 ஆயிரத்திற்கு விற்பனை
அப்போது அந்த பெண் திடுக்கிடும் தகவலை போலீசாரிடம் தெரிவித்தார். மாதவிடாய் காலத்தில் தனது கை, கால்களை கட்டி போட்டு ரத்தத்தை பிடித்து அதனை அகோரி பூஜை மற்றும் மாந்திரீக செயல்களுக்காக தனது மாமியார் மந்திரவாதியிடம் ரூ.50 ஆயிரத்திற்கு விற்று வருவதாக கூறினார்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த பெண்ணின் மாமியார் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
மாமியாரின் இந்த கொடூர செயலுக்கு மந்திரி சந்திரகாந்த் பாட்டீல் தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தினார். மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு போலீசாரை அறிவுறுத்தினார்.