அமராவதியில் கனமழைக்கு வீடு இடிந்து விழுந்து தாய், மகள் பலி
அமராவதியில் கனமழைக்கு வீடு இடிந்து விழுந்து தாய், மகள் பலியானார்கள்.
அமராவதி,
அமராவதி மாவட்டம் சந்தூர்பஜார் தாலுகா வப்காவ் கிராமத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வந்தது. இதன் காரணமாக இன்று காலை 6 மணி அளவில் அங்கிருந்த வீடு ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. இதனால் வீட்டில் இருந்த 5 பேர் இடிபாடுகளில் சிக்கி கொண்டு உதவி கேட்டு சத்தம் போட்டனர். இது பற்றி அறிந்த அக்கம்பக்கத்தினர் இடிபாடுகளில் சிக்கி இருந்த தாய், மகள் உள்பட 5 பேரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் அங்கு சென்று போராடி 5 பேரையும் மீட்டு மாவட்ட ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர் நடத்திய பரிசோதனையில் 35 வயது தாய், அவரது 7 வயது மகள் உயிரிழந்தது தெரியவந்தது. மற்ற 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story