பராமரிப்பு பணி; நவிமும்பையில் 12 மணி நேரம் குடிநீர் வினியோகம் ரத்து


பராமரிப்பு பணி; நவிமும்பையில் 12 மணி நேரம் குடிநீர் வினியோகம் ரத்து
x
தினத்தந்தி 8 Oct 2023 12:45 AM IST (Updated: 8 Oct 2023 12:46 AM IST)
t-max-icont-min-icon

பராமரிப்பு பணி காரணமாக நவிமும்பையில் 12 மணி நேரம் குடிநீர் வினியோகம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

நவிமும்பை,

பராமரிப்பு பணி காரணமாக நவிமும்பையில் 12 மணி நேரம் குடிநீர் வினியோகம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

12 மணி நேரம்

போக்கர்பாடாவில் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பராமரிப்பு மற்றும் மின் இணைப்பு பணிகள் நாளை (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் தொடர்ச்சியாக 12 மணி நேரம் நடைபெற உள்ளது. இதன் காரணமாக அந்த நேரத்தில் குடிநீர் வினியோகம் ரத்து செய்யப்பட உள்ளது. இதுபற்றி மாநகராட்சி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

குடிநீர் வினியோகம் ரத்து

பராமரிப்பு பணி காரணமாக நவிமும்பையில் உள்ள முக்கிய பகுதிகளான பேலாப்பூர், நெரூல், துர்பே, வாஷி, கோபர்கைர்னே, கன்சோலி, ஐரோலி, கலம்பொலி, நியூபன்வெல், கரஞ்சேட், கலூந்திரே ஆகிய இடங்களிலும், சிட்கோ நிர்வாகத்திற்கு உட்பட்ட காமோட்டே, கார்கர் ஆகிய பகுதிகளிலும் குடிநீர் வினியோகம் ரத்து செய்யப்படுகிறது. பணிகள் நிறைவு பெற்ற பின்னர் மறுநாள் 10-ந்தேதி குறைந்த அழுத்ததுடன் குடிநீர் வினியோகம் செய்யப்படும். எனவே பொதுமக்கள் குடிநீரை சேமித்து சிக்கனமாக பயன்படுத்தி மாநகராட்சிச்கு ஒத்துழைப்பு தரவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story