காஞ்சூர்மார்க்கில் மெட்ரோ பணிமனை அமைக்காததால் மாநிலத்துக்கு ரூ.10 ஆயிரம் கோடி இழப்பு - ஆதித்ய தாக்கரே குற்றச்சாட்டு

காஞ்சூர்மார்க்கில் மெட்ரோ பணிமனை அமைக்காததால் மாநிலத்துக்கு ரூ.10 ஆயிரம் கோடி இழப்பு - ஆதித்ய தாக்கரே குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 15 Oct 2023 12:30 AM IST (Updated: 15 Oct 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சூர்மார்க்கில் மெட்ரோ பணிமனை அமைக்காததால் மராட்டியத்துக்கு ரூ.10 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஆதித்ய தாக்கரே குற்றம்சாட்டி உள்ளார்.

மும்பை,

காஞ்சூர்மார்க்கில் மெட்ரோ பணிமனை அமைக்காததால் மராட்டியத்துக்கு ரூ.10 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஆதித்ய தாக்கரே குற்றம்சாட்டி உள்ளார்.

இடம் மாறிய மெட்ரோ பணிமனை

மும்பையில் மெட்ரோ 3-வது திட்டப்பணிகள் கொலபா முதல் சீப்ஸ் வரை நடந்து வருகிறது. 3-வது மெட்ரோ ரெயில் திட்டத்துக்காக ஆரேகாலனியில் பணிமனை அமைக்க பா.ஜனதா ஆட்சியில் முடிவு செய்யப்பட்டு பணிகள் நடந்து வந்தது. 2019-ல் உத்தவ் தாக்கரே தலைமையில் ஆட்சி அமைந்த போது, ஆரேகாலனி மெட்ரோ பணிமனை காஞ்சூர்மார்க்கிற்கு மாற்றப்பட்டது. ஆரேகாலனியில் வனப்பகுதியை பாதுகாக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்தநிலையில் கடந்த ஆண்டு ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பா.ஜனதா கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் மெட்ரோ பணிமனை மீண்டும் ஆரேகாலனிக்கு மாற்றப்பட்டது.

ரூ.10 ஆயிரம் கோடி இழப்பு

இந்த நிலையில் காஞ்சூர்மார்க்கில் மெட்ரோ பணிமனை அமைக்கப்படாததால் மராட்டியத்துக்கு ரூ.10 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஆதித்ய தாக்கரே குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:- காஞ்சூர்மார்க்கில் மெட்ரோ 3, 6, 4, 14-வது திட்டப்பணிகளுக்கான ஒருங்கிணைந்த பணிமனையை அமைக்க நாங்கள் வலியுறுத்தினோம். அது நடந்து இருந்தால் ரூ.10 ஆயிரம் கோடி சேமிக்கப்பட்டு இருக்கும். தற்போது தனித்தனியாக பணிமனைகள் அமைக்க வேண்டி இருப்பதால் அரசுக்கு கூடுதல் செலவாகும். இவ்வாறு அவர் கூறினாா்.

Next Story