'லைப் லைன்' எக்ஸ்பிரஸ் ராய்காட் வருகை- 30-ந் தேதி வரை பொதுமக்களுக்கு சிகிச்சை


லைப் லைன் எக்ஸ்பிரஸ் ராய்காட் வருகை- 30-ந் தேதி வரை பொதுமக்களுக்கு சிகிச்சை
x

ரெயில்வே நிர்வாகம் மத்திய சுகாதாரத்துறையுடன் இணைந்து 'லைப் லைன்' எக்ஸ்பிரஸ் ராய்காட் வருகை

மும்பை,

ரெயில்வே நிர்வாகம் மத்திய சுகாதாரத்துறையுடன் இணைந்து 'லைப் லைன்' எக்ஸ்பிரஸ் ரெயிலை இயக்கி வருகிறது. இந்த ரெயில் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பொதுமக்களுக்கு இலவச மருத்துவ சேவையை வழங்கி வருகிறது. குறிப்பாக மருத்துவ வசதி கிடைக்காத மக்களுக்கு இந்த ரெயில் மருத்துவ சேவை மிகவும் உதவிகரமாக உள்ளது.

இந்தநிலையில் இந்த லைப் லைன் எக்ஸ்பிரஸ் தற்போது மராட்டிய மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் உள்ள கோரேகாவ் பகுதிக்கு சென்று உள்ளது. இந்த ரெயில் வருகிற 30-ந் தேதி வரை அங்குள்ள மக்களுக்கு மருத்துவ சேவை வழங்க உள்ளது. இங்கு சிகிச்சை பெற விரும்பும் மக்கள் கோரேகாவ் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் ரோகா அரசு ஆஸ்பத்திரியை ெதாடர்பு கொள்ள வேண்டும் என ராய்காட் மாவட்ட அதிகாரி கிரன் பாட்டீல் கூறியுள்ளார். லைப் லைன் எக்ஸ்பிரசில் ஆபரேஷன் தியேட்டர் உள்பட பல்வேறு நவீன மருத்துவ வசதிகள் அடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story