உல்லாஸ்நகர் இரட்டை கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை -


உல்லாஸ்நகர் இரட்டை கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை -
x
தினத்தந்தி 15 Aug 2023 1:00 AM IST (Updated: 15 Aug 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon

உல்லாஸ்நகர் இரட்டை கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி கல்யாண் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.

தானே,

உல்லாஸ்நகர் இரட்டை கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி கல்யாண் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.

தொழிலாளர்கள் கொலை

தானே மாவட்டம் உல்லாஸ்நகர் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் ராகேஷ், அமித்சந்த் என்ற 2 தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர். இவர்களை 2012-ம் ஆண்டு டிசம்பர் 20-ந் தேதி முன்விரோதம் காரணமாக பல்வீந்தர் சிங் (33), தில்ஜித் (34), ராய்னா கான் (36), பால்சந்திரா (35) ஆகிய 4 பேர் கடத்தி சென்றனர். பின்னர் அவர்கள் 2 தொழிலாளர்களையும் கழுத்தை அறுத்து கொலை செய்தனர். உடல்களை அந்த பகுதியில் உள்ள கால்வாயில் வீசிவிட்டு தப்பினர்.

ஆயுள் தண்டனை

சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகள் 4 பேரையும் கைது செய்தனர். இந்த இரட்டை கொலை வழக்கு விசாரணை கல்யாண் செசன்ஸ் கோர்ட்டில் நடந்தது. விசாரணையின் போது 4 பேர் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரங்கள், சாட்சியங்களுடன் நிருபிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ரிதேஷ் வாக்மாரே இரட்டை கொலை வழக்கில் கொலையாளிகள் 4 பேருக்கும் ஆயுள் தண்டனை, தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.


Next Story