புனேயில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி கைது


புனேயில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி கைது
x

லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக புனேயில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

மாவட்ட செய்திகள்

மும்பை,

லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக புனேயில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

புனே வாலிபர்

மராட்டிய மாநிலம் புனேயை சேர்ந்த வாலிபர் ஒருவர் பயங்கரவாத அமைப்பிடம் இருந்து நிதி பெற்று வருவதாக மராட்டிய பயங்கரவாத தடுப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்தநிலையில் புனே தபோடி பகுதியில் வசித்து வந்த அந்த வாலிபரை நேற்று பிடித்து தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவரது பெயர் ஜுனைத் முகமது(வயது28) என்பதும், அவருக்கு பயங்கரவாத தொடர்பு இருப்பதும் உறுதியானது. காஷ்மீரை சேர்ந்த 'கஜ்வதே-அல்-ஹிந்த்' என்ற பயங்கரவாத அமைப்பிடம் இருந்து நிதி பெற்று வந்தது தெரியவந்தது.

லஷ்கர்-இ-தொய்பா

மேலும் ஜூனைத் முகமது பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்புடன் சமூக வலைத்தளம் மூலம் தொடர்பில் இருந்ததும், அந்த அமைப்புக்கு ஆள்சேர்த்து விடும் பணியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவர் மீது பயங்கரவாத தொடர்பு குறித்து பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர். இன்று பிற்பகல் அவர் புனே கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வருகிற 3-ந் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு உத்தரவிட்டது.


Next Story