ரத்னகிரியில் கட்டுமான பணிகள் நடந்து வந்த மேம்பாலம் இடிந்து விழுந்ததால் பரபரப்பு


ரத்னகிரியில் கட்டுமான பணிகள் நடந்து வந்த மேம்பாலம் இடிந்து விழுந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 17 Oct 2023 1:15 AM IST (Updated: 17 Oct 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

ரத்தினகிரியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலம் இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது

மும்பை,

ரத்னகிரி மாவட்டம் சிப்லும் பகுதியில் மும்பை - கோவா நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. பாலம் கட்ட ராட்சத இரும்பு சட்டங்கள் பொருத்தப்பட்டு இருந்தன. நேற்று காலை 8.30 மணியளவில் பாலத்துக்காக வைக்கப்பட்டு இருந்த 2 ராட்சத சட்டங்கள் சரிந்து விழுந்தன. ராட்சத சட்டம் சரிந்து விழுந்ததில் பாலம் பயங்கர சத்தத்துடன் விழுந்தது. பாலம் இடிந்து விழுந்ததை பார்த்து அந்த பகுதியில் நின்று கொண்டு இருந்த மக்கள் அலறி அடித்து கொண்டு ஓடினர். அதிர்ஷ்டவசமாக விபத்து நடந்த பகுதியில் தொழிலாளர்கள், பொதுமக்கள் யாரும் இல்லை. இதனால் விபத்தில் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கட்டுமான பணி நடந்து வந்த பாலம் இடிந்து விழுந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.


Next Story