குறைந்த விலையில் வீடு வாங்கி தருவதாக கூறி நண்பரிடம் ரூ.10 லட்சம் மோசடி - தபால்காரர் மீது வழக்குப்பதிவு


குறைந்த விலையில் வீடு வாங்கி தருவதாக கூறி நண்பரிடம் ரூ.10 லட்சம் மோசடி - தபால்காரர் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 15 Aug 2023 8:15 PM GMT (Updated: 15 Aug 2023 8:15 PM GMT)

தானேயில் குறைந்த விலையில் வீடு வாங்கி தருவதாக கூறி நண்பரிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்த தபால்காரர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

மும்பை,

மிராரோடு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் சேலார். தபால்காரரான இவரிடம் பிரகாஷ் என்பவர் சிறு வயது முதலே நண்பராக பழகி வந்தார். இந்தநிலையில் சுரேஷ் செலார் தனக்கு தெரிந்த அரசு அதிகாரிகள் இருப்பதாகவும், அவர்கள் மூலமாக முதல்-மந்திரி ஒதுக்கீட்டில் குறைந்த விலையில் வீடு தருவதாகவும் பிரகாஷிடம் தெரிவித்தார். அவரது பேச்சை நம்பியை பிரகாஷ் அந்த வீட்டை வாங்க விருப்பம் தெரிவித்தார். அதற்கான விண்ணப்பங்களை பெற்று கையெழுத்து போட்டு கொடுத்துள்ளார். பின்னர் முன்பணமாக ரூ.10 லட்சத்து 50 ஆயிரத்தை சுரேஷ் சேலாரிடம் வழங்கினார். ஆனால் நண்பர் கூறியபடி அவருக்கு வீடு கிடைக்கவில்லை. சில மாதங்கள் ஆன நிலையில் சுரேஷ் சேலார் மந்திராலயா சென்று தனக்கு தெரிந்த அதிகாரிகளை சந்தித்து பேசியுள்ளதாகவும், வீடு கிடைக்க மேலும் காலதாமதம் ஆகும் எனவும் சாக்குபோக்கு கூறி வந்தார். இது பிரகாஷிற்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. எனவே வீடு ஒதுக்கீடு குறித்து அதிகாரிகளிடம் நேரில் சென்று விசாரித்துள்ளார். இதில் சுரேஷ் செலார் தன்னை ஏமாற்றி பணம் பறித்தது பிரகாசுக்கு தெரியவந்தது. இதுகுறித்த அவர் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் சுரேஷ் சேலார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story