முன்னாள் சிவசேனா எம்.எல்.ஏ.வின் ரூ.78 கோடி சொத்துகள் முடக்கம் - அமலாக்கத்துறை அதிரடி
முன்னாள் சிவசேனா எம்.எல்.ஏ.வின் ரூ.78 கோடி சொத்துகள் முடக்கி அமலாகத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
மாவட்ட செய்திகள்
மும்பை,
மந்திரி ஏக்நாத் ஷிண்டே கட்சி தலைமைக்கு எதிராக ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் அசாம் மாநிலம் கவுகாத்தியில் முகாமிட்டு உள்ளார். அமலாக்கத்துறை போன்ற மத்திய முகமைகளின் நடவடிக்கைகளுக்கு பயந்து சில எம்.எல்.ஏ.க்கள் அவருக்கு ஆதரவாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அமலாக்கத்துறை சிவசேனா முன்னாள் எம்.எல்.ஏ. அர்ஜூன் கோத்கர் கட்டுப்பாட்டில் இருந்த ஜல்னா சாகாகரி சாகர் கர்கானா சர்க்கரை ஆலையில் 200 ஏக்கர் நிலத்தை முடக்கி உள்ளது. இந்த நிலத்தின் மதிப்பு ரூ.78.4 கோடி என கூறப்படுகிறது.
மராட்டிய மாநில கூட்டுறவு சங்க வங்கி மோசடி தொடர்பான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை எடுத்து உள்ளது.
Related Tags :
Next Story