கோரேகாவில் ரூ.60 லட்சம் போதைப்பொருளுடன் வெளிநாட்டுக்காரர் கைது


கோரேகாவில் ரூ.60 லட்சம் போதைப்பொருளுடன் வெளிநாட்டுக்காரர் கைது
x

கோரேகாவில் ரூ.60 லட்சம் போதைப்பொருளுடன் வெளிநாட்டுக்காரர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

மாவட்ட செய்திகள்

மும்பை,

மும்பை கோரேகாவ் பகுதியில் போதைப்பொருள் வினியோகம் செய்ய ஆசாமி ஒருவர் வரவுள்ளதாக போதைத்தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு கண்காணித்து வந்தனர். சந்தேகம் படும்படி நடமாடிய ஒருவரை பிடித்து விசாரித்தனர். அவர் நைஜீரியா நாட்டை சேர்ந்த தைவ்யோ ஆயோடோலே சாம்சன் (வயது 34) என்பது தெரியவந்தது.

அவரிடம் நடத்திய சோதனையில், 400 கிராம் எடையுள்ள மெபட்ரோன் என்ற போதைப்பொருள் இருந்ததை பறிமுதல் செய்தனர். ஆய்வில் இவற்றின் மதிப்பு ரூ.60 லட்சம் ஆகும். விசாரணையில் இவர் பிசினஸ் விசாவில் மும்பை வந்ததாக தெரியவந்தது.

இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

-----


Next Story