பிரபல கவிஞர் நாம்தேவ் மனோகர் மரணம்


பிரபல கவிஞர் நாம்தேவ் மனோகர் மரணம்
x
தினத்தந்தி 4 Aug 2023 12:15 AM IST (Updated: 4 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பிரபல கவிஞர் நாம்தேவ் மனோகர் மரணம் அடைந்தார்.

மும்பை,

அவுரங்காபாத்தை சேர்ந்தவர் பிரபல மராத்தி கவிஞரும், பாடலாசிரியருமான நாம்தேவ் தோன்டோ மனோகர் (வயது81). அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு புனேயில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு இருந்தார். நேற்று அவர் வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார். அவுரங்காபாத் மாவட்டத்தில் 1942-ல் பிறந்தவரான நாம்தேவ் தோன்டோ மனோகர் 'ஜாகலா பிரேம் அர்பவே', 'கங்கா வாகு டி நிர்மல்' உள்ளிட்ட பல கவிதைகளை எழுதி உள்ளார். மராத்தி படங்களுக்கு பாடல்களும் எழுதி உள்ளார். அவரின் திறமையை பாராட்டி மத்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்து உள்ளது.

கவிஞர் நாம்தேவ் தோன்டோ மனோகரின் இறுதி சடங்கு இன்று (வெள்ளிக்கிழமை) அவுரங்காபாத்தில் உள்ள பாலஸ்கேடாவில் நடக்கிறது. அவரின் மறைவுக்கு முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்-மந்திரிகள் தேவேந்திர பட்னாவிஸ், அஜித்பவார், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் விஜய் வடேடிவார் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.



Next Story