உத்தவ் தாக்கரேக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய ஏக்நாத் ஷிண்டே


உத்தவ் தாக்கரேக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய ஏக்நாத் ஷிண்டே
x

உத்தவ் தாக்கரேக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய ஏக்நாத் ஷிண்டே, வாழ்த்து செய்தியில் அவரை சிவசேனா தலைவர் என குறிப்பிடுவதை தவிர்த்தார்.

மும்பை,

உத்தவ் தாக்கரேக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய ஏக்நாத் ஷிண்டே, வாழ்த்து செய்தியில் அவரை சிவசேனா தலைவர் என குறிப்பிடுவதை தவிர்த்தார்.

வார்த்தைப்போர்

மராட்டியத்தில் ஆட்சி செய்து வந்த சிவசேனா தலைமையிலான மகா விகாஸ் அகாடி அரசுக்கு ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏ.க்களால் கவிழ்ந்தது. உத்தவ் தாக்கரே முதல்-மந்திரி பதவியை இழந்தார்.

இதைத்தொடர்ந்து அதிருப்தி அணிக்கு தலைமை தாக்கிய ஏக்நாத் ஷிண்டே, பா.ஜனதாவின் ஆதரவுடன் முதல்-மந்தியானார்.

இதைத்தொடர்ந்து உண்மையான சிவசேனாவினர் நாங்கள் தான் என ஏக்நாத் ஷிண்டே அணியினர் கூறி உரிமை கோரி உள்ளனர். மேலும் உத்தவ் தாக்கரே ஆதரவாளர்களும், அதிருப்தி அணியினரும் கடும் வார்த்தை போரில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிறந்த நாள் வாழ்த்து

இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரேவின் 62 வயது பிறந்தநாளான இன்று அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் தனது டுவிட்டர் பதிவில், "முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள், அவர் ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளுடனும் இருக்க நான் பிரார்த்திக்கிறேன்" என்றார்.

இருப்பினும் அவர் சிவசேனா தலைவர் என தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

--------------


Next Story