சட்டவிரோத கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க தவறிய மாநகராட்சி அதிகாரி பணியிடை நீக்கம்


சட்டவிரோத கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க தவறிய மாநகராட்சி அதிகாரி பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 27 Sept 2022 10:45 AM IST (Updated: 27 Sept 2022 10:52 AM IST)
t-max-icont-min-icon

சட்டவிரோத கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க தவறிய மாநகராட்சி அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

தானே,

சட்டவிரோத கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க தவறிய மாநகராட்சி அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

சட்டவிரோத கட்டிடங்கள்

தானே மாவட்டத்தில் உள்ள பிவண்டி நிசாம்பூர் மாநகராட்சியில் உதவி கமிஷனராக பணியாற்றி வருபவர் சுனில் போயர். இவர் பிவண்டி பகுதியில் உள்ள சட்டவிரோத கட்டிடங்கள் குறித்து பொது மக்கள் பலமுறை புகார் அளித்தும், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

மேலும் மாநகராட்சி நிர்வாகம் பல முறை அறிவுறுத்தியும் அவர் சட்டவிரோத கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.

பணியிடை நீக்கம்

இந்தநிலையில் மாநகராட்சி கமிஷனர் விஜய்குமார் மாசல், உதவி கமிஷனர் சுனில் போயரை அதிரடியாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பான உத்தரவில், "சட்டவிரோத கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு திரும்ப, திரும்ப அறிவுறுத்தியும் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே உதவி கமிஷனர் மீது கமிஷனர் நடவடிக்கை எடுத்து உள்ளார்" என கூறப்பட்டுள்ளது.


Next Story