ராட்சத எந்திரங்களை கொண்டு செல்ல முடியவில்லை; மீட்பு பணி மேலும் சில நாட்கள் நீடிக்க வாய்ப்பு


ராட்சத எந்திரங்களை கொண்டு செல்ல முடியவில்லை; மீட்பு பணி மேலும் சில நாட்கள் நீடிக்க வாய்ப்பு
x
தினத்தந்தி 21 July 2023 7:30 PM GMT (Updated: 21 July 2023 7:30 PM GMT)

நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிக்கு ராட்சத எந்திரங்களை கொண்டு செல்ல முடியாததால் மீட்பு பணி மேலும் சில நாட்களுக்கு நீடிக்க வாய்ப்புள்ளது

மும்பை,

நிலச்சரிவால் பெரும் உயிர் சேதம் கண்டுள்ள இர்சல்வாடி கிராமம் மலையின் மேல் பகுதியில் உள்ளது. இது இயற்கை வளம் கொஞ்சும் அழகிய கிராமம் ஆகும். ஆனால் இந்த கிராமத்துக்கு செல்ல தார் சாலை வசதி கிடையாது. கரடு முரடான சரிவு பாதையில் தான் செல்ல வேண்டும். குறிப்பாக வாகனங்களை கொண்டு செல்ல முடியாது. இதனால் பொக்லைன் போன்ற ராட்சத எந்திரங்களை மீட்பு பணிக்கு கொண்டு செல்ல முடியவில்லை. மீட்பு குழுவினர் மண்வெட்டி, கம்பி, கடப்பாறை போன்ற உபகரணங்கள் மூலம் மட்டுமே மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மோப்ப நாய்கள் மோப்பம் பிடிக்கும் இடத்தை மையமாக வைத்து மண்குவியல்களை தோண்டி உள்ளே யாரும் சிக்கி உள்ளனரா என்று தேடிவருகின்றனர். மலை அடிவாரத்தில் இருந்து அந்த கிராமத்திற்கு ஏறி செல்ல வேண்டும் என்றால் சுமார் 1½ மணி நேரமாகும். ராட்சத எந்திரங்களை பயன்படுத்த முடியாமல் முழுக்க, முழுக்க மனித உழைப்பை நம்பியே மீட்பு பணி நடைபெறுகிறது. இதனால் மீட்பு பணி பெரும் சவாலாக அமைந்து இருப்பதுடன், தொய்வை ஏற்படுத்தி உள்ளது. மீட்பு பணி நிறைவடைய இன்னும் பல நாட்கள் ஆகலாம் என்றும், மீட்பு பணி நிறைவில் தான் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்ற முழு விவரம் தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story