ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி அதிகாரி சிக்கினார்


ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி அதிகாரி சிக்கினார்
x
தினத்தந்தி 27 Jun 2023 7:15 PM GMT (Updated: 27 Jun 2023 7:15 PM GMT)

ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய மும்பை மாநகராட்சி அதிகாரி போலீசில் சிக்கினார்.

மும்பை,

ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய மும்பை மாநகராட்சி அதிகாரி போலீசில் சிக்கினார்.

ரூ.2 லட்சம் லஞ்சம்

மும்பை சிவ்ரி பகுதியை சேர்ந்த ஓட்டல் உரிமையாளர், சமீபத்தில் ஓட்டலை சீரமைத்து கட்டி உள்ளார். ஓட்டல் பொது இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ளதாக நோட்டீசு அனுப்பி விடப்போவதாக உரிமையாளரை மும்பை மாநகராட்சி எப்-தெற்கு வார்டு இளநிலை பொறியாளர் மச்சிந்திரா நாம்தேவ் தண்டேல் மிரட்டினார். நோட்டீசு அனுப்பாமல் இருக்க ரூ.3¾ லட்சம் லஞ்சமாக தர வேண்டும் என்றார். ஓட்டல் உரிமையாளர் மாநகராட்சி அதிகாரிக்கு ரூ.2 லட்சம் தருவதாக கூறினார்.

மாநகராட்சி அதிகாரி சிக்கினார்

பின்னர் சம்பவம் குறித்து லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்தார். அதிகாரிகள் கொடுத்த யோசனையின்படி ஓட்டல் உரிமையாளர், மாநகராட்சி அதிகாரியை சந்தித்து ரூ.2 லட்சத்தை கொடுத்தார். அப்போது அங்கு சென்ற லஞ்ச ஒழிப்பு துறையினர் மாநகராட்சி அதிகாரியை கையும் களவுமாக பிடித்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Related Tags :
Next Story