பன்வெலில் சரக்கு ரெயில் பாதை அமைக்கும் பணி; பேலாப்பூர்- பன்வெல் இடையே மின்சார ரெயில் சேவை ரத்து


பன்வெலில் சரக்கு ரெயில் பாதை அமைக்கும் பணி; பேலாப்பூர்- பன்வெல் இடையே மின்சார ரெயில் சேவை ரத்து
x
தினத்தந்தி 30 Sept 2023 12:45 AM IST (Updated: 30 Sept 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

பன்வெலில் சரக்கு ரெயில் பாதை அமைக்கும் பணி நடப்பதால் பேலாப்பூர்- பன்வெல் இடையே 38 மணி நேரம் மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

மும்பை,

பன்வெலில் சரக்கு ரெயில் பாதை அமைக்கும் பணி நடப்பதால் பேலாப்பூர்- பன்வெல் இடையே 38 மணி நேரம் மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

ரெயில் சேவை ரத்து

பன்வெல் பகுதியில் சரக்கு ரெயில்களுக்கு என தனியாக 2 வழித்தடம் அமைக்கும் பணி இன்று (சனிக்கிழமை) இரவு 11 மணி முதல் திங்கட்கிழமை மதியம் 1 மணி வரை நடக்கிறது. பணி நடைபெறும் 38 மணி நேரம் பேலாப்பூர் - பன்வெல் இடையே துறைமுகம், டிரான்ஸ்ஹார்பர் வழித்தடத்தில் ரெயில் சேவை ரத்து செய்யப்படும் என மத்திய ரெயில்வே அறிவித்து உள்ளது. சி.எஸ்.எம்.டி. - வாஷி, நெருல், பேலாப்பூர் இடையே மட்டுமே துறைமுக வழித்தடத்தில் மின்சார ரெயில்கள் இயக்கப்படும். டிரான்ஸ்ஹார்பர் வழித்தடத்தில் தானே - நெருல், வாஷி இடையே இயக்கப்படும்.

நாளை மறுநாள் மதியம் சேவை தொடங்கும்

பன்வெலுக்கு கடைசி மின்சார ரெயில் இன்று இரவு 9.02 மணிக்கு சி.எஸ்.எம்.டி.யில் இருந்து புறப்படும். பன்வெலில் இருந்து இரவு 10.35 மணிக்கு சி.எஸ்.எம்.டி.க்கு கடைசி ரெயில் கிளம்பும். அதன்பிறகு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மதியம் 12.08 மணிக்கு தான் முதல் ரெயில் சி.எஸ்.எம்.டி.யில் இருந்து பன்வெலுக்கு இயக்கப்படும். பன்வெலில் இருந்து மதியம் 1.37 மணிக்கு முதல் ரெயில் சி.எஸ்.எம்.டி.க்கு இயக்கப்படும். இதேபோல பணிகள் முடிந்து நாளை மறுநாள் மதியம் முதல் தான் டிரான்ஸ்ஹார்பர் வழித்தடத்தில் தானே-பன்வெல் இடையே மின்சார ரெயில்கள் இயக்கப்படும். இந்த தகவலை மத்திய ரெயில்வே தெரிவித்து உள்ளது.


Next Story