காரில் கடத்தி வந்த கஞ்சா பறிமுதல்


காரில் கடத்தி வந்த கஞ்சா பறிமுதல்
x
தினத்தந்தி 2 July 2022 11:53 PM IST (Updated: 3 July 2022 12:26 AM IST)
t-max-icont-min-icon

காரில் கடத்தி வந்த கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

அம்பர்நாத்,

கல்யாண் உபர்டே மைதானத்திற்கு கஞ்சா விற்க ஆசாமிகள் வரவுள்ளதாக மான்பாடா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அப்பகுதியில் ரகசியமாக கண்காணித்து வந்தனர். அப்போது அங்கு கார் ஒன்று வந்ததை வழிமறித்து சோதனை போட்டனர். இதில் பார்சல் பார்சலாக இருந்ததை கைப்பற்றி பிரித்து ஆய்வு நடத்தினர். இதில் 272 கிலோ எடையுள்ள கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சா கடத்தி வந்தவர்கள் மஜ்காவை சேர்ந்த பைசல் பாரூக் தாக்குர், பிவண்டியை சேர்ந்த முகமது அதிப் என்பது தெரியவந்தது. இவர்களை போலீசார் கைது செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மற்றும் காரின் மதிப்பு ரூ.47 லட்சத்து 76 ஆயிரம் ஆகும். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story