என் மீது பதியப்பட்ட வழக்குகளுக்காக பயப்பட மாட்டேன்- சந்திரகாந்த் கைரே பேச்சு


என் மீது பதியப்பட்ட வழக்குகளுக்காக பயப்பட மாட்டேன்- சந்திரகாந்த் கைரே பேச்சு
x

முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே குறித்து அவதூறாக பேசியதாக என்மீது பதியப்பட்ட வழக்குகளுக்காக பயப்பட மாட்டேன் என சந்திரகாந்த் கைரே கூறுகிறார்.

அவுரங்காபாத்,

முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே குறித்து அவதூறாக பேசியதாக என்மீது பதியப்பட்ட வழக்குகளுக்காக பயப்பட மாட்டேன் என சந்திரகாந்த் கைரே கூறுகிறார்.

வழக்குப்பதிவு

அவுரங்காபாத் தொகுதி முன்னாள் எம்.பி.யும், உத்தவ் தாக்கரேவின் அணியை சேர்ந்தவருமான சந்திரகாந்த் கைரே சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், சிவசேனா பிளவுக்கு வித்திட்ட முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவை கடுமையாக தாக்கி பேசினார்.

அதில், "முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவின் வழிகாட்டிம், மறைந்த சிவசேனா தலைவருமான ஆனந்த் திகே உயிருடன் இருந்திருந்தால், அவர் ஏக்நாத் ஷிண்டேவை துரோகி என்று கூறி தலைகீழாக தொங்கவிட்டு தாக்கியிருப்பார்" என குறிப்பிட்டு இருந்தார்.

இது குறித்து ஏக்நாத் ஷிண்டே அணியை சேர்ந்த ராஜேந்திர ஜன்ஜால் என்பவர் சந்திரகாந்த் கைரேக்கு எதிராக சதாரா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இது குறித்து சந்திரகாந்த் கைரே நேற்று கூறியதாவது:-

இலாகா ஒதுக்கீடு

என்மீது குற்றவழக்கு ஏதேனும் பதியப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை. ஆனால், சிவசேனா எனும் அமைப்பை முதல்-மந்திரி உடைத்தால், அவரை வணங்க வேண்டுமா?. பால் தாக்கரே இந்த அமைப்பை கட்டியெழுப்பினார். இது அவருக்கு நான் செய்யும் கைமாறாகும். ஏக்நாத் ஷிண்டே அணியை சேர்ந்தவர்கள் உத்தவ் தாக்கரேவை விமர்சித்து வருகின்றனர். அவர்தான் முந்தைய அரசில் அவர்களுக்கு இலாகாக்களை ஒதுக்கினார். சிவசேனா தொண்டர்கள் இப்போது அவர்கள் மீது கோபத்தில் உள்ளனர்.

எனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை கண்டு நான் பயப்படவில்லை. நான் தனியாக இதை எதிர்த்து போராடுவேன். என்னை மோசமாக நடத்திவிட கூடும். நான் வரும் தீபாவளியை சிறையில் கழிப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story