பிவண்டி மாநகராட்சியில் உதவி கமிஷனரை நாற்காலியில் இருந்து தள்ளி விட்டவர் மீது வழக்கு

பிவண்டி மாநகராட்சியில் உதவி கமிஷனரை நாற்காலியில் இருந்து தள்ளி விட்டவர் மீது வழக்கு
x
தினத்தந்தி 6 Sep 2023 7:00 PM GMT (Updated: 6 Sep 2023 7:01 PM GMT)

பிவண்டி மாநகராட்சியில் உதவி கமிஷனரை நாற்காலியில் இருந்து தள்ளி விட்டவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தானே,

பிவண்டி மாநகராட்சியில் உதவி கமிஷனரை நாற்காலியில் இருந்து தள்ளி விட்டவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தள்ளி விட்டார்

தானே மாவட்டம் பிவண்டியை சேர்ந்தவர் முகமது மோமின். இவர் நேற்று மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்று பிவண்டி நகரில் சட்டவிரோதமான கட்டுமானத்திற்கு எதிராக மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை என சம்பந்தப்பட்ட மாநகராட்சி உதவி கமிஷனரிடம் முறையிட்டார். இதற்கு அவர் போலீசாரின் உதவியுடன் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இருப்பினும் முகமது மோமின் திடீரென கூச்சலிட்டு உதவி கமிஷனரை நாற்காலியில் இருந்து கீழே தள்ளி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

வழக்குப்பதிவு

இதனை கண்ட அங்கிருந்த ஊழியர்கள் அவரை பிடித்து வெளியேற்றினர். இது தொடர்பாக பிவண்டி நகர போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின்பேரில் போலீசார் முகமது மோமின் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story