'கேரட் அல்வா' பட்ஜெட்- உத்தவ் தாக்கரே கிண்டல்


கேரட் அல்வா பட்ஜெட்- உத்தவ் தாக்கரே கிண்டல்
x
தினத்தந்தி 11 March 2023 12:15 AM IST (Updated: 11 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் தாக்கல் செய்யப்பட்டது ‘கேரட் அல்வா’ பட்ஜெட் என உத்தவ் தாக்கரே கிண்டல் அடித்துள்ளார்.

மும்பை,

மராட்டியத்தில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் குறித்து முன்னாள் முதல் -மந்திரி உத்தவ் தாக்கரே கூறுகையில், "சமூகத்தின் எல்லா தரப்பினருக்கும் பட்ஜெட்டில் தேன் கொடுத்து உள்ளனர். எங்களின் திட்டங்கள் பல பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பால் தாக்கரே கிளினிக் எங்களின் திட்டம். விவசாயிகளுக்கு குறைந்தபட்ச விலை கிடைக்க பட்ஜெட்டில் எதுவும் கூறப்படவில்லை. இது ஒரு கேரட் அல்வா பட்ஜெட்" என்றார்.

காங்கிரஸ் மாநிலத்தலைவர் நானா படோலே, "ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் பகல் கனவு தான். விவசாயிகளுக்கு குறிப்பிட தகுந்த அளவில் எந்த அறிவிப்புகளும் இல்லை" என்றார்.


Next Story