தகானு தாலுகாவில் வேன் மோதி சிறுவன்- சிறுமி பலி - டிரைவர் கைது
தகானு தாலுகாவில் வேன் மோதி சிறுவன், சிறுமி பலியாகினர். தப்பிஓடிய வேன் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
வசாய்,
தகானு தாலுகாவில் வேன் மோதி சிறுவன், சிறுமி பலியாகினர். தப்பிஓடிய வேன் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
வேன் மோதி விபத்து
பால்கர் மாவட்டம் தகானு தாலுகா மோட்காவ்-கோப்ரிபாடா பகுதியில் கடந்த 30-ந்தேதி 7 வயது சிறுவன் தனது 12 வயது சகோதரியுடன் நடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த வேன் ஒன்று எதிர்பாராதவிதமாக நடந்து சென்ற அக்காள், தம்பி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் 2 பேரும் தூக்கிவீசப்பட்டு படுகாயமடைந்து உயிருக்கு போராடினர். விபத்து நடந்த உடனே வேன் டிரைவர் அங்கிருந்து தப்பிஓடிவிட்டார்.
2 பேரும் பலி
இதற்கிடையே தகவல் அறிந்து விரைந்து வந்த பொதுமக்கள் சிறுவன், சிறுமியை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு நடத்திய பரிசோதனையில் வரும் வழியிலேயே 2 பேரும் உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பிஓடிய வேன் டிரைவரை தேடிவந்தனர். இந்தநிலையில் தலைமறைவான 27 வயது வேன் டிரைவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.