மும்பையில் மோசமான காற்று மாசு- பொதுமக்கள் பாதிப்பு


மும்பையில் மோசமான காற்று மாசு- பொதுமக்கள் பாதிப்பு
x
தினத்தந்தி 6 Dec 2022 12:15 AM IST (Updated: 6 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

மும்பையில் காற்று மாசு அதிகரித்து உள்ளது. இதனால் பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

மும்பை,

மும்பையில் காற்று மாசு அதிகரித்து உள்ளது. இதனால் பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

காற்று மாசு அதிகரிப்பு

மும்பையில் கடந்த சில நாட்களாக குளிரின் தாக்கம் அதிகமாக உள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் குளிர்ந்த வானிலை நிலவி வருகிறது. இந்தநிலையில் நகரில் காற்று மாசும் அதிகரித்து உள்ளது. சாலைகளில் பனி மூட்டம்போல காற்று மாசு காணப்படுகிறது.

இதில் நேற்று முன்தினம் மும்பையில் காற்றின் தரம் ஏ.க்யூ.ஐ. 293 என்ற அளவில் பதிவாகி இருந்தது. இது காற்றின் தரம் மோசமானதை காட்டுகிறது. நேற்றும் நகரில் காற்று மாசு அதிகமாகவே இருந்தது.

குழந்தைகள், முதியவர்கள் பாதிப்பு

காற்றின் தர ஆராய்ச்சி மையத்தின்படி (சபார்) 200-க்கும் அதிகமான ஏ.க்யூ.ஐ. அளவு மோசமான காற்றின் தரத்தை குறிக்கிறது. 300-க்கும் அதிகமான ஏ.க்யூ.ஐ. மிகவும் மோசமான காற்றின் தரத்தை குறிக்கிறது.

காற்று மாசு குழந்தைகள், முதியவர்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என டாக்டர்கள் எச்சரித்து உள்ளனர். குறிப்பாக நோய் பரவல், ஆஸ்துமா, நுரையீரல் தொடர்பான பாதிப்புகளை முதியவர்கள், குழந்தைகள் எதிர்கொள்ள நேரிடலாம் எனவும் தெரிவித்து உள்ளனர்.

மும்பையில் காற்று மாசு அதிகரித்து இருப்பதற்கு முன்னாள் மந்திரி ஆதித்ய தாக்கரே டுவிட்டரில் கவலை தெரிவித்து உள்ளார்.


Next Story