ஏ.டி.எம். மையத்தில் வாடிக்கையாளருக்கு உதவி செய்வதாக கூறி பணம் அபேஸ் செய்த 4 பேர் கைது


ஏ.டி.எம். மையத்தில் வாடிக்கையாளருக்கு உதவி செய்வதாக கூறி பணம் அபேஸ் செய்த 4 பேர் கைது
x
தினத்தந்தி 22 Jun 2023 7:15 PM GMT (Updated: 22 Jun 2023 7:16 PM GMT)

ஏ.டி.எம். மையத்தில் வாடிக்கையாளர்களுக்கு உதவி செய்வதாக கூறி பணத்தை அபேஸ் செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

ஏ.டி.எம். மையத்தில் வாடிக்கையாளர்களுக்கு உதவி செய்வதாக கூறி பணத்தை அபேஸ் செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

போலீசில் புகார்

மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்றிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத சிலர் மையத்தின் உள்ளே நுழைந்தனர். பணம் எடுக்க உதவி செய்வதாக கூறி பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து நூதன முறையில் ரூ.50 ஆயிரத்தை அபேஸ் செய்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து பணத்தை அபேஸ் செய்த கும்பலை பிடிக்க கண்காணிப்பு கேமரா மூலம் விசாரணை நடத்தினர். இதில் 4 பேரின் அடையாளம் தெரியவந்தது.

4 பேர் கைது

மேலும் அவர்கள் பாண்டுப்பில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று 4 பேரையும் பிடித்து கைது செய்தனர். கைதானவர்கள் தர்மவீர் மகோதா (வயது32), விவேக் பஸ்வான் (28), பிர்லால் சாகா (23), கிஷோர் மகோதா ஆகியோர் என்பது தெரியவந்தது. இவர்கள் ஏ.டி.எம். மையத்திற்கு வரும் வாடிக்கையாளர்களை குறிவைத்து பணத்தை அபேஸ் செய்து வந்தது தெரியவந்தது. இதனால் அவர்கள் மீது பல வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. போலீசார் 4 பேரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி தங்களது காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




Next Story