பணியில் இருந்த உதவி போலீஸ் கமிஷனர் திடீர் சாவு


பணியில் இருந்த உதவி போலீஸ் கமிஷனர் திடீர் சாவு
x
தினத்தந்தி 13 March 2023 12:15 AM IST (Updated: 13 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மும்பை,

மும்பை யல்லோகேட் மண்டல உதவி போலீஸ் கமிஷனராக இருந்து வந்தவர் நிதின் (வயது55). இவர் நேற்று பணியில் இருந்த போது போலீஸ் உணவு விடுதியான அன்டே சேம்பரில் மதியம் உணவு சாப்பிட சென்றிருந்தார். இதன்பிறகு சாப்பிட்ட சில நிமிடங்களில் அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் இருக்கையிலேயே சாய்ந்தார்.

இதனை கண்ட அங்கிருந்தவர்கள் மற்ற போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அவரை மீட்டு அருகில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு டாக்டர் நடத்திய பரிசோதனையில் வரும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது குடும்பத்தினருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். மேலும் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நடத்திய பரிசோதனையின் போது மாரடைப்பு காரணமாக அவரது உயிர் பிரிந்தது தெரியவந்தது.

உதவி போலீஸ் கமிஷனர் உயிரிழந்த விவகாரம் பற்றி அறிந்த போலீஸ் உயர் அதிகாரிகள் ஆஸ்பத்திரிக்கு விரைந்தனர். அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பலியான போலீஸ் கமிஷனர் நிதின்விற்கு மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.


Next Story