விமான பயணத்தின்போது ஒரு சிறிய தவறால் எது வேண்டுமானாலும் நடக்கலாம்- ஐகோர்ட்டு கருத்து


விமான பயணத்தின்போது ஒரு சிறிய தவறால் எது வேண்டுமானாலும் நடக்கலாம்- ஐகோர்ட்டு கருத்து
x

விமான பயணத்தின்போது ஒரு சிறிய தவறால் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று உயர வரம்பை மீறிய கட்டிடங்களுக்கு எதிரான வழக்கில் ஐகோர்ட்டு கருத்து கூறியது.

மும்பை,

விமான பயணத்தின்போது ஒரு சிறிய தவறால் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று உயர வரம்பை மீறிய கட்டிடங்களுக்கு எதிரான வழக்கில் ஐகோர்ட்டு கருத்து கூறியது.

உயர வரம்பை மீறிய கட்டிடங்கள்

மும்பை நகரில் உள்ள விமான நிலையத்திற்கு அருகே நிர்ணயிக்கப்பட்ட உயர வரம்பை மீறி கட்டிடங்கள் கட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வக்கீல் யஷ்வந்த் செனாய் பொதுநல வழக்கை தாக்கல் செய்தார். அவர் தனது மனுவில், " இந்த கட்டிடங்கள் இங்குள்ள விமான நிலையத்தில் விமானம் தரையிறங்குவதற்கும் ஆபத்தை ஏற்படுத்துகின்றன. இது ஒரு நாள் விபரீத சம்பவங்களுக்கு வழிவகுக்கும்" என்றார்.

இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி தீபங்கர் தத்தா மற்றும் நீதிபதி எம்.எஸ்.கார்னிக் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி கூறியதாவது:-

எதுவும் நடக்கலாம்

இந்த விவகாரம் அனைவருக்கும் கவலை அளிக்கிறது. சமீபத்தில் அஜய் தேவ்கன் நடித்த "ரன்வே 34" திரைப்படத்தை பார்க்க நேர்ந்தது. எந்த சம்பவமும் விமானியை பொறுத்தது இல்லை. அனைத்தும் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டை பொறுத்தது.

நாம் விமானம் தரையிறக்கபோவதாகவோ அல்லது புறப்பட போவதாகவோ விமானி கூறுவதை நம்புகிறோம். வெளியில் வானிலை சீராக இருப்பதால் எல்லாம் நன்றாக செல்வதாக நம்புகிறோம்.

ஆனால் இது அனைத்து வேறு பல காரணிகளை பொறுத்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சிறிய தவறு நடந்தால் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.

பிரமாண பத்திரம்

இந்த பிரச்சினையில் மராட்டிய அரசு மற்றும் மும்பை மாநகராட்சி என்ன நடவடிக்கை எடுத்தது என்பது குறித்து பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு நிதிபதிகள் தெரிவித்தனர்.

இந்த வழக்கு வரும் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வரும்.


Next Story