ஆனந்த சதுர்த்தி திருவிழாவில் கடந்த 2 ஆண்டுகளை விட அதிக ஒலி மாசு


ஆனந்த சதுர்த்தி திருவிழாவில் கடந்த 2 ஆண்டுகளை விட அதிக ஒலி மாசு
x

ஆனந்த சதுர்த்தி திருவிழாவின் போது மும்பையில் கடந்த 2 ஆண்டுகளை விட அதிக ஒலி மாசு

மும்பை,

ஆனந்த சதுர்த்தி திருவிழாவின் போது மும்பையில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டபோது, பக்தர்கள் விண்ணை முட்டும் கோஷம் எழுப்பினர். மேலும் இசை வாத்தியங்களை முழங்கினர். ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்பட்டன. இதன் காரணமாக அதிக ஒலி மாசு ஏற்பட்டதாக மும்பையை சேர்ந்த அவாஜ் பவுண்டேசன் என்ற தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த நிறுவன சார்பில் அளவீடு செய்யப்பட்டபோது, ஒபேரா ஹவுஸ் அருகே அதிகப்பட்சமாக நேற்று முன்தினம் இரவு 120.2 டெசிபல் ஒலிமாசு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோல சாஸ்திரி நகர் பகுதியில் 118 டெசிபல், கிர்காவ் கடற்கரை பகுதியில் 106 டெசிபல் ஒலி மாசு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்து ஆண்டுகளில் 2021-ல் 93.1 டெசிபல், 2020-ல் 100.7 டெசிபல், 2019-ல் 121.3 டெசிபல் ஒலி மாசு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே இந்த ஆண்டு கடந்த 2 ஆண்டுகளை விட அதிக ஒலி மாசு ஏற்பட்டுள்ளது.


Next Story