மாதேரன்- அமன்லாட்ஜ் இடையே கூடுதல் ரெயில் சேவை- மத்திய ரெயில்வே அறிவிப்பு


மாதேரன்- அமன்லாட்ஜ் இடையே கூடுதல் ரெயில் சேவை- மத்திய ரெயில்வே அறிவிப்பு
x

சுற்றுலா பயணிகள் வசதிக்காக மாதேரன்- அமன்லாட்ஜ் இடையே, கூடுதலாக 4 ரெயில் சேவை இயக்கப்பட உள்ளதாக மத்திய ரெயில்வே தெரிவித்து உள்ளது.

மாவட்ட செய்திகள்

மும்பை,

சுற்றுலா பயணிகள் வசதிக்காக மாதேரன்- அமன்லாட்ஜ் இடையே, கூடுதலாக 4 ரெயில் சேவை இயக்கப்பட உள்ளதாக மத்திய ரெயில்வே தெரிவித்து உள்ளது.

மினி ரெயில் சேவை

மத்திய ரெயில்வே சார்பில், மும்பையில் இருந்து 100 கி.மீ தொலைவில் உள்ள மலைவாசஸ்தலமாக மாதேரன் பகுதியில் மினி ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. கோடைகால விடுமுறையையொட்டி, சுற்றுலா பயணிகள் மாதேரனுக்கு அதிகளவில் வருகை தருவதையொட்டி கூடுதல் சேவை இயக்கப்பட உள்ளது.

இதுபற்றி மத்திய ரெயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி சிவாஜி சுத்தார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மாதேரன்- அமன்லாட்ஜ் இடையே இயக்கப்படும் மினி ரெயில்கள் தற்போது 16 சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. சுற்றுலா பயணிகளின் வசதிக்காக கூடுதலாக 4 சேவைகள் நேற்று முன்தினம் முதல் தொடங்கப்பட்டு வருகிற 31-ந் தேதி வரை இயக்கப்பட உள்ளது. இதனால் மொத்தம் தினசரி 20 சேவைகள் இயங்கும்" என்று தெரிவித்துள்ளார்.

வார இறுதி நாட்கள்

ஏற்கனவே வார இறுதி நாட்களில் 20 சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. நிலச்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக நேரல்- மாதேரன் இடையேயான வழித்தடம் சேதமானதால், நீண்ட காலமாக ரெயில் சேவை நிறுத்தப்பட்டு உள்ளது.

ஆனால் மாதேரன்- அமன்லாட்ஜ் இடையே தற்போது ரெயில் சேவை இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

-----


Next Story