தானேயில் வாகனத்தை அகற்றவிடாமல் ரகளையில் ஈடுபட்ட கும்பல்
தானேயில் வாகனத்தை அகற்றவிடாமல் ரகளையில் ஈடுபட்ட கும்பல் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது
தானே,
தானே உப்வன் ஏரி அருகே போக்குவரத்திற்கு இடைஞ்சலாக வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக போக்குவரத்து போலீசாருக்கு புகார் வந்தது. இந்த புகாரின்படி போலீசார் கடந்த 19-ந்தேதி அங்கு நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது வேன் ஒன்றை போலீசாரின் உதவியுடன் ஊழியர்கள் நகர்த்த முயன்ற போது அங்கு வந்த கும்பல் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மீறி வாகனத்தை நகர்த்த முயன்றால் தாக்குதலில் ஈடுபட போவதாக மிரட்டினர். இந்த சம்பவம் அடங்கிய வீடியோ ஒன்று சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவியது. தகவல் அறிந்த போலீசார் தகராறில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். இது வரையில் யாரும் கைது செய்யப்படவில்லை எனவும், விசாரணைக்கு பிறகு நடவடிக்கை தொடரும் எனவும் போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story