டோம்பிவிலியில் 4 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்; ஒருவர் பலி


டோம்பிவிலியில் 4 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்; ஒருவர் பலி
x
தினத்தந்தி 16 Sept 2023 1:30 AM IST (Updated: 16 Sept 2023 1:31 AM IST)
t-max-icont-min-icon

டோம்பிவிலியில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் பலியானார். மேலும் 2 பேரி கதி என்னவென்று தெரியவில்லை

தானே,

டோம்பிவிலியில் 4 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டமானது. இதில் ஒருவர் பலியானார். மேலும் 2 பேரின் கதி என்னவென்று தெரியவில்லை.

4 மாடி கட்டிடம்

தானே மாவட்டம் டோம்பிவிலி கிழக்கு ஆயர் கிராமத்தில் ஆதிநாராயண் புவன் என்ற 4 மாடி கட்டிடம் இருந்தது. 50 ஆண்டுகள் பழமையான இது ஆபத்தான கட்டிடம் என கல்யாண்-டோம்பிவிலி மாநகராட்சி அடையாளம் கண்டது. மேலும் கட்டிடத்தில் வசிப்பவர்களை காலி செய்ய உத்தரவிட்டது. அதன்படி நேற்று முன்தினம் அந்த கட்டிடத்தில் வசித்தவர்கள் வீடுகளை காலி செய்தனர். இருப்பினும் சிலர் அங்கு திரும்பி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாலை 5.30 மணியளவில் அந்த கட்டிடம் திடீரென இடிந்து விழுந்து தரைமட்டமானது. தகவல் அறிந்த தானே மீட்பு படையினர் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளில் சிக்கிய 8 பேரை லேசான காயத்துடன் பத்திரமாக மீட்டனர்.

ஒருவர் பிணமாக மீட்பு

மேலும் சூரஜ் பிர்ஜா (வயது55) என்பவரை பிணமாக மீட்டனர். மேலும் 2 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

மாநகராட்சி கமிஷனர் பாவுசாகேப் டாங்கே நேரில் சென்று மீட்பு பணிகளை பார்வையிட்டார்.


Next Story