டிரைவர் குடிபோதையில் இருந்ததால் 60 கி.மீ. தூரத்துக்கு அரசு பஸ்சை ஓட்டிய கண்டக்டர்


டிரைவர் குடிபோதையில் இருந்ததால் 60 கி.மீ. தூரத்துக்கு அரசு பஸ்சை ஓட்டிய கண்டக்டர்
x
தினத்தந்தி 26 Sept 2023 12:30 AM IST (Updated: 26 Sept 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

டிரைவர் குடிபோதையில் இருந்ததால் அரசு பஸ்சை 60 கி.மீ. தூரத்துக்கு கண்டக்டர் ஓட்டி வந்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

மும்பை,

டிரைவர் குடிபோதையில் இருந்ததால் அரசு பஸ்சை 60 கி.மீ. தூரத்துக்கு கண்டக்டர் ஓட்டி வந்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

குடிபோதையில் டிரைவர்

ராய்காட் மாவட்டம் ஸ்ரீவர்தனில் இருந்து மும்பைக்கு சம்பவத்தன்று எஸ்.டி. (அரசு) பஸ் கிளம்பியது. பஸ்சை டிரைவர் அபாஜி தாகாஸ் ஓட்டினார். பஸ்சில் 32 பயணிகள் இருந்தனர். பஸ் மன்காவ் வந்தபோது, டிரைவர் பஸ்சை நிறுத்திவிட்டு அருகில் உள்ள மதுக்கடைக்கு சென்று மதுகுடித்தார். டிரைவர் மதுக்கடைக்குள் சென்றதை கண்டக்டர் அபய் காசர் கவனித்தார். மன்காவில் இருந்து புறப்பட்டவுடன், மதுபோதையில் இருந்த டிரைவர் பஸ்சை தாறுமாறாக ஓட்டினார். இதனால் பயணிகள் பீதியில் உறைந்தனர்.

பஸ்சை ஓட்டிய கண்டக்டர்

மதுபோதையில் பஸ்சை ஓட்டும் டிரைவரிடம் இருந்து பயணிகளை காப்பாற்ற கண்டக்டர் அபய் காசர் முடிவு செய்தார். அவர் டிரைவரிடம் பேச்சு கொடுத்து பஸ்சை ஓரமாக நிறுத்த வைத்தார். மேலும் டிரைவரை காலியாக இருந்த சீட்டில் படுக்க வைத்துவிட்டு் அங்கு இருந்து சுமார் 60 கி.மீ. தூரத்துக்கு பஸ்சை கண்டக்டர் கவனமாக ஓட்டிவந்தார். குடிபோதையில் டிரைவர் பஸ்சை தொடர்ந்து ஓட்டி இருந்தால், விபத்து ஏற்பட்டு பயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு இருக்கும். தங்களை பத்திரமாக கொண்டு வந்து சேர்த்த கண்டக்டருக்கு பயணிகள் நன்றி கூறினர். இந்தநிலையில் மும்பை வந்தவுடன் குடிபோதையில் பஸ்சை ஓட்டிய டிரைவர் குறித்து கண்டக்டர் உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தார். இந்த சம்பவத்தை அடுத்து குடிபோதையில் பஸ் ஓட்டிய டிரைவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் மீது பென் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீவர்தன் எஸ்.டி. பஸ் டெப்போ மேலாளர் எம்.ஏ. மானேர் கூறினார்.


Next Story