ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காரில் இருந்து 5 பேர் மீட்பு


ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காரில் இருந்து 5 பேர் மீட்பு
x

ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காரில் இருந்த 5 பேர் தீயணைப்பு படையினரால் மீட்கப்பட்டனர்.

புனே,

புனேயில் ஏற்பட்ட கனமழை காரணமாக நேற்று கடக்வாஸ்தா அணை நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இதன் காரணமாக ஆற்றில் 26 ஆயிரம் கனஅடி நீர் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. இதன் காரணமாக புனே நகரில் உள்ள சிங்காட் சாலை, எஸ்.எம் ஜோஷி பாலம் வழியாக வெள்ளம் பாய்ந்தோடியது. அப்போது ஆற்றின் கரையோரமாக இருந்த வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இந்த நிலையில் பால்கர் மாவட்டத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 5 பேர் புனேவிற்கு காரில் வந்தனர்.

சிங்காட் சாலை வழியாக ரெயில் நிலையம் நோக்கி சென்ற போது ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் கார் சிக்கி கொண்டது. இதனால் வெள்ளநீரில் கார் அடித்து செல்லப்பட்டதால் அதன் உள்ளே இருந்த 5 பேர் உதவி கேட்டு சத்தம் போட்டனர். அப்போது மீட்பு பணியில் இருந்த தீயணைப்பு படையினர் ஆற்றில் இறங்கி காரில் கயிற்றை கட்டினர். பின்னர் கிரேன் மூலம் காரை இழுத்து கரைக்கு கொண்டு வந்தனர். இந்த சம்பவத்தில் காரில் இருந்த 5 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மீட்கப்பட்டவர்கள் குணால் லால்வானி (வயது28), அவரது மனைவி பிரியா (22), கபில் (21), வஞ்சிகா (13), கிருஷ்ணா (8) என்பது தெரியவந்தது.


Next Story