மும்பை-ஆக்ரா நெடுஞ்சாலையில் கன்டெய்னர் லாரி மீது கார் மோதி 4 பேர் பலி
மும்பை-ஆக்ரா நெடுஞ்சாலையில் டயர் பஞ்சராகி நிறுத்தப்பட்டு இருந்த கன்டெய்னர் லாரி மீது கார் மோதி 4 பேர் பலியாகினர்.
நாசிக்,
மும்பை-ஆக்ரா நெடுஞ்சாலையில் டயர் பஞ்சராகி நிறுத்தப்பட்டு இருந்த கன்டெய்னர் லாரி மீது கார் மோதி 4 பேர் பலியாகினர்.
டயர் பஞ்சரான லாரி
மராட்டிய மாநிலம் துலேவை சேர்ந்தவர் கிரண் அகிராவ் (வயது47). இவர் கிருஷ்ணாகாந்த் மாலி (43), பிரவின் பவார் (38), அனில் பாட்டீல் (38) ஆகிய 3 பேருடன் காரில் நாசிக் சென்றிருந்தார். இதன்பின்னர் அவர்கள் துலேவிற்கு திரும்பினர். நேற்று காலை 7 மணி அளவில் மும்பை-ஆக்ரா நெடுஞ்சாலையில் உள்ள சாந்த்வாட் தாலுகா மால்சானே சிவார் பகுதியில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது டயர் பஞ்சாரான கன்டெய்டனர் லாரி ஒன்று சாலை ஓரமாக நிறுத்தப்பட்டு இருந்தது. அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து லாரியின் பின்னால் பயங்கரமாக மோதி விபத்தில் சிக்கியது.
4 பேரும்பலி
இந்த விபத்தில் காரில் இருந்த 4 பேரும் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்தனர். தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று காரின் இடிபாடுகளில் சிக்கிய 4 பேரை மீட்டனர். ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்த 4 பேரும் உயிரிழந்ததாக தெரியவந்தது. இதையடுத்து உடல்களை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காலையில் ஏற்பட்ட விபத்து காரணமாக மும்பை-ஆக்ரா நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.