டோம்பிவிலியில் சிறுவனை கடத்தி கொலை செய்த வழக்கில் கைதான 4 பேர் விடுதலை; தானே சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு


டோம்பிவிலியில் சிறுவனை கடத்தி கொலை செய்த வழக்கில் கைதான 4 பேர் விடுதலை; தானே சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 21 Oct 2023 12:45 AM IST (Updated: 21 Oct 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

ேடாம்பிவிலியில் சிறுவன் கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான 4 பேரை கோர்ட்டு விடுவித்து தீர்ப்பு அளித்தது.

தானே,

ேடாம்பிவிலியில் சிறுவன் கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான 4 பேரை கோர்ட்டு விடுவித்து தீர்ப்பு அளித்தது.

சிறுவன் கடத்தி கொலை

தானே மாவட்டம் டோம்பிவிலி பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவன் யாஷ் ஷா(வயது14), கடந்த 2009-ம் ஆண்டு ஜூன் 25-ந் தேதி மர்ம கும்பல் யாஷ் ஷாவை கடத்தி சென்றது. சிறுவனை கடத்திய கும்பல் அவனது பெற்றோரிடம் ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டியது. பின்னர் சிறுவனை கொலை செய்து, உடலை பத்லாப்பூர் எவா பகுதியில் வீசிச்சென்றது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுவனை பணத்துக்காக கடத்தி கொலை செய்ததாக கிஷோர்(36), ராகேஷ் (37), ஜாய் (42), சந்தோஷ் தேவேந்திரா (36) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

விடுதலை

இந்த வழக்கு மீதான விசாரணை தானே சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை நீதிபதி அமித் சேதே விசாரித்து வந்தார். இந்தநிலையில் இந்த வழக்கு விசாரணை நிறைவில் குற்றம்சாட்டப்பட்ட 4 பேர் மீதான குற்றச்சாட்டுகளை போலீசார் கோர்ட்டில் தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்க வில்லை. இதையடுத்து இந்த வழக்கில் தீர்ப்பு கூறிய நீதிபதி, குற்றம்சாட்டப்பட்டவர்களின் ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர்களை குற்றவாளிகள் என கூறமுடியாது என கூறி, 4 பேரையும் வழக்கில் இருந்து விடுவித்தார்.


Next Story